Search blog.co.uk

Archives for: May 2006

தேன் குரல் தென்றல்

by covairavee @ 2006-05-29 - 16:07:55

KR SPB RR 3

தேன் குரல் தென்றல்

ஷ்ரி -- ஷ்ரி ரங்க ரங்கநாதனின் -- மஹாநதி
ப -- பவுர்ணமி நிலவில் -- கன்னித்தாய்
தி -- திருமகள் தேடி வந்தாள் - இருளும் ஒளியும்

ப -- படகு படகு ஆசை படகு - உத்தமன்
ண் -- இந்திரலோகத்து சுந்தரி - உயிருள்ளவரை உஷா
டி -- தினம் தினம் - தங்கைக்கோர் கீதம்
த -- தலைமகனே கலங்காதே - அருணாசலம்
ரா -- ராதா காதல் வராதா - நான் அவனில்லை
து --துள்ளிதிரிந்ததது ஒரு காலம் - என்றும் அன்புடன்
ய -- யமுனா நதி இங்கே - கவுரவம்
ல -- லைலா லைலா - நந்தினி

பா - பால் நிலவு நேரம் - அன்பு ரோஜா
ல -- லக்கி லக்கி - ரட்சகன்
சு -- சுமைத்தாங்கியே - அந்த ராத்திரிக்கு சாட்சி இலை
ப் -- பவுர்ணமி நேரம் -- கன்னிப்பென்
ர -- ரம்யா ரம்யா - தொட்டல் சினுங்கி
ம -- மன்மத லீலை - மன்மத லீலை
ணி -- நினைத்துப்பார்கிறேன் - லலிதா
ய -- யாருமில்லை இங்கே - பணத்துக்காக
ம் -- மாதமோ ஆவணி - உத்தரவின்றி உள்ளே வா

சா -- சாந்து பொட்டு -- தேவர் மகன்
வி -- விழியிலே - புவனா ஒரு கேள்விக்குறி
த் -- தொட தொட - இந்திரா
தி -- தினம் விடிந்ததும் - தர்மா
ரி -- ரிம் ஜிம் ரிம் ஜிம் - ஜீவீத சக்ரம் (தெலுங்கு)

ப -- படுத்தாள் புரண்டாள் - வண்டிக்காரன் மகன்
ல் -- லக்ஸ் பாப்பா - ஏழுமலை
ல -- லாலிஜொ லாலிஜோ - இந்துருடு சந்துருடு (தெலுங்கு)
வி -- வெற்றி வெற்றி மீது -- தேடி வந்த மாப்பிள்ளை

ச -- சம்சாரம் என்பது வீணை -- மயங்குகிறாள் ஒரு மாது
ர -- ரொம்பா நாளாக -- என்னடி மீனாட்சி
ண் - நாடோடி பாட்டுத்தானே - அரிச்சந்திரா

கோவை ரவீ


 
 

என் உயிரின் ஒலி

by covairavee @ 2006-05-29 - 13:48:52

DOL SPB2 copy

என் உயிரின் ஒலி

என் உயிரின் ஒலி, எனக்கு கேட்டது
புது மலரின் சுகந்தம், என் மனம் நுகர்ந்தது
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

என் நினைவுகள் என்னை விட்டு போனது
நிலவில் புது ஒளியை என் கண்கள் கண்டது
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

தேனின் சுவையில் என்னிதயம் தித்தித்தது
தென்றலின் மடியில் என் மனம் ஊஞ்சலாடுது
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

ஸ்வரங்களுக்குள் என் உணர்வுகள் தொலந்தது போனது
சுகமான இதம்தனை என் நெஞ்சம் உணர்ந்து
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

காலமெல்லாம் காதல் செய்த கானம் கேட்டது
கண்களூக்குள் மழைத்தூறல் கனிந்து நின்றது
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

மனமெல்லாம் இறக்கை கட்டி பறந்தது
சிறுபிள்ளை போல் எந்தனுள்ளம் துள்ளிச்சிரித்தது
அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

இவையென்றென்றும் தொடர..
என்னிதயம் வாழ்த்துகின்றது
பல ஜென்மங்கள் வாழ்கவென்று..!.!

-- கோவை ரவீ

PERMISSION LETTER FROM Dr.SPB and Office Bearers

by covairavee @ 2006-05-25 - 13:36:34

SPB TIGHT 1 copySPB PERMISSION LETTER

PERMISSION LETTER FROM Dr.S.P.BALASUBRAHMANYAM

TO WHO EVER ITMAY CONCERN

The bearers of this letter are my Association Members and I authorised to that extent.

With Love and affection

s/d.. S.P.BALASUBRAHMANYAM
12.09.1982

Office Bearers:

Our Club Well Wisher Mr.Ramesh Dave, Coimbatore

Image and video hosting by TinyPic

President : R.Raveendran
Secretary : P.Nallamuthu
Treasurer : SP.Shanmuga Sundaram

Members:
Mr.N.Ramanathan
Mr.Jeevanlal
Mr.Arun Kumar
Mr.Venkatesh,
Mr.Saravana Perumal
Mr.Pramodh,Thailand
Mr.Cholamannan

Thanks to Nilacharal site for this link is Dr.SPB Bio-Data: http://www.nilacharal.com/enter/celeb/spb.html

ஆனந்த குரலுக்கு அறுபது வயது

by covairavee @ 2006-05-22 - 15:48:07

Photobucket - Video and Image Hosting

ஆனந்த குரலுக்கு அறுபது வயது

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்.
அத்தனைப்பிறப்பிலும், உன் தேனிசை குரலால்
என் உள்ளத்தில் நிலைத்திட வேண்டுகிறேன்.
சங்கீதவானில் உன் தேன் குரல்மடியில்
மேகமாய் தவழ்ந்திட வேண்டுகிறேன்.
பாமலர்களின் மணத்தில் உன் மகரந்தக்குரலில்
மயங்கி நுகர்ந்திட வேண்டுகிறேன்.
இசையெனும் மழையில் உன் குரலெனும் சாரலில்
சிலிர்த்து நனைந்திட வேண்டுகிறேன்.
ஸ்வரங்களின் சிறகில், உன் க..ம..க.. குரலால்
கேட்டு பறந்திட வேண்டுகிறேன்.
ராகங்கள் மீட்டும் உன் சிருங்கார குரல் என்னை
தென்றலாய் வருடிட வேண்டுகிறேன்.
இயற்க்கை அளித்த இந்த சுகமான உணர்வுகளை
உன் குரலில் வழங்கிய இறைவனை
என்றென்றும் வணங்கிட வேண்டுகிறேன்.
அத்தனை பிறப்பிலும் உனக்கு
இத்தனை இனிய குரல் எனும் வரத்தை வாரி
வழங்கிட வாழ்த்தி வேண்டுகிறேன்.

கோவை ரவீ

ஒரு அமுத ஊற்று

by covairavee @ 2006-05-09 - 16:54:11

Image and video hosting by TinyPic

ஒரு அமுத ஊற்று

நிலவில் குளித்து சோலை புகுந்து
மலர்கள் தரித்து - சந்தனம் அணிந்த சீதளக் குரலே..!
உலகை மறந்து எங்கள் உயிர்கள்
ஆன்மாவை உணர்வது உன் கீதங்களில் மட்டுமே..!
பாறைகள் கூட பனியாய் உருகும்
உன் பக்குவக் குரலில் இதயங்கள்
இதமாய் நெருடப்படும்..!
உன் கானம் கேட்கும் கோடை மேகம்
ச்ந்தனச் சூலில் சாறல் பொழியும்..!
உன் தொனியின் துடிப்பில் நாதம் வந்து நர்த்தனம் செய்யும்..!
பல்லவியுடன் சரணங்கள் வந்து
சொர்க்கக் குரலில் சங்கமமாகும்..!
உன் அமிர்த வர்ஸணிக்கு ஆகாயம் மட்டுமல்ல
எங்கள் இதயங்களும் அன்பினைப் பொழ்யும்..!
சங்கீதங்களைச் ச்ந்தித்து சப்தித்து வந்த
உன் சாரீரம் இப்பொழுது
அனுதினமும் இல்லங்களில் அமைதியான இரவுகளில்
சின்னத்திரை தொடர்களிலே தவழ்ந்து வரும் தேன் குரலாய்
ஈரேழு ஜென்மங்ளுக்கு மலர்கள் கொண்டு மஞ்சம் விரிக்கும்..
அதில் புரளும் எங்கள்
இதயங்கள் என்றும்
உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கும்.

கோவை ரவீ